Sunday, November 11, 2007
மனசுக்குள் மழை 2
அன்னைக்கு cafeteriaல வழக்கம் போல தனியா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தேன். cafeteriaலேயே நான் உக்காந்திருந்த tableல இருந்த எதிர் seat மட்டும் தான் காலியா இருந்தது. இவன் சுத்தி முத்திப் பாத்துட்டு என்கிட்ட எதிர் seatல யாரச்சு வர்றாங்களான்னு கேட்டுட்டு இல்லைன்னு தெரிஞ்சதும் அவன் உக்காந்து சாப்பிட ஆரம்பிச்சான். அந்த கேள்விய தவிர வேறெந்த பேச்சும் பேசல.
அதே நாள் சாயந்திரம், நான் இருக்கிற apartmentla போற வழியில அவன மறுபடியும் பாத்தேன். ஏதோ ஒரு சின்ன குழந்தை அழுதுகிட்டே இவன்கிட்ட இன்னொரு குழந்தைய பத்தி கோள் சொல்லிகிட்டு இருந்தது. இவரு சிரிச்சு கிட்டே அந்த குழந்தைக்கு சமாதானம் செஞ்சுகிட்டு இருந்தாரு என்னமோ இவர் தான் உலகத்துக்கே நீதி சொல்ல வந்த கடவுள் மாதிரி. ம்ம். நினைப்புத் தான்.
மறுநாள் மதியம் cafeteriaல நான் உக்கார இடம் தேடிகிட்டு இருந்தேன். இந்த முறை அவன் உக்காந்து இருந்த tableல இருந்த எதிர் seat மட்டும் காலியா இருந்தது. சரி, அங்க உக்கார வேணாம் வேற இடம் தேடுவோம். திரும்பி வேற இடம் தேடிகிட்டு இருந்தேன். அத பார்த்துட்டான். வேறென்ன பண்ணுவாங்க. அவனாவே கூப்பிட்டான்.
"Excuse me. இங்க யாரும் வரமாட்டாங்க. நீங்க வேணா உக்காருங்க" ன்னான்.
ஒரு sec யோசிச்சுசேன்.
"என்ன யோசிக்கிறிங்க? எங்க இவன love பண்ணிடப் போறோமுன்னு யோசிக்கிறிங்களா" ன்னான்.
எனக்கு சிரிப்புத் தான் வந்தது. ஒருவேளை இதுக்கு தான் சொல்லி இருப்பானோ?
பதிலுக்கு நானும் "ஹோ! இந்த நினைப்பு வேறயா சாருக்கு. ம் சரி அதையும் பாக்கலாமே." seatல உக்காந்தேன்.
அங்க ஆரம்பிச்சான் நூல் விட.
"என் பேர் சத்யா."
.....
"நான் புதுசா இந்த ஊருக்கு வந்துருக்கேன். இத்தனை நாள் bangaloreல இருந்தேன்".
.....
"நீங்க தோத்துட்டீங்க. தோத்துட்டீங்க".
"நானா"?
"பின்ன, எங்க நம்ம பேச ஆரம்பிச்சா love பண்ணிருவோமுன்னு பயந்து கேக்காத மாதிரி நடிக்கிறிங்க".
"ஹாலோ. உங்க பேர் சத்யா. புதுசா இந்த ஊருக்கு வந்துருக்கிங்க".
"bangaloreல இருந்து".
"ம்ம். bangaloreல இருந்து".
"so, அப்போ கேட்டுட்டு இருக்கிங்க. good. உங்க பேர் சொல்றது".
"பேர் மிதுவா. போறுமா?"
"உங்கள இன்னைக்கு விஜயநகர் பஸ் ஸ்டாப்ல பாத்தேன். அங்க தான் இருக்கீங்களோ?"
....
"என்னங்க. பேச்ச காணாம்".
"ம்ம். நானும் பாத்தேன் உங்கள அங்க. பஸ் ஸ்டாப்ல இல்ல. நேத்து ஓரு கொழந்தைக்கு சமாதானம் சொல்லிகிட்டு இருந்திங்களே அப்போ".
"ஓ! அப்போ நிஜமாவே love பண்றீங்க போல".
"ஹலோ!"
ரெண்டு பேரும் பலமா சிரிச்சோம்.

Labels: mazhai
Tuesday, November 06, 2007
மனசுக்குள் மழை 1
இந்நேரத்துக்கு 10 மெசேஜாவது வந்து இருந்துருக்கும். எனக்கு காலங்காத்தால மெசெஜ் அனுப்ப தான் எப்பவும் முழுச்சுகிட்டு இருப்பானோ என்னவோ? இவனோட பேசிகிட்டே இருந்தா நேரம் போறதே தெரியாது. எப்பவும் எதாவது பேசிகிட்டே இருப்பான். அவனா பேசுறத நிறுத்தினா தான் உண்டு. அவனோட பேசாம எனக்கு பொழுதே போகாது. ஆனா இப்போ, சே! ஏன் தான் அவன் கூட பழகினோமுன்னு இருக்கு. அவன நினக்கிறப்போ வர்ற கோபம்மும், அவன் மேல இருக்கிற பொய்யான வெறுப்பையும் விட அன்னைக்கு இருந்த வெறுமை பரவாயில்லையோன்னு தோணுது. ஓவ்வொரு இரண்டு நிமிஷத்துக்கும் ஒருதடவை அவன பத்தி நினைக்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன். வேற விஷயத்த யோசிக்க ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்தில இவன பத்தி நினைக்க ஆரம்பிச்சுடறேன். என்ன அப்படி பெருசா தப்பு பண்ணிட்டேன் இப்படி இவன் மெசேஜ் கூட பண்ணாம இருக்கான். நேத்து அவன் dinner சாப்பிட கூப்பிட்டு போகல அதுக்காக இப்படியா கோவிச்சுக்குவான்? காலையில பஸ் ஏற வர்றப்போ கூட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருந்தான். மொத்தமாவே இன்னைக்கு 4 வார்த்தைய தான் பேசிருப்பான். போன வாரத்தோட இவன் கூட பழக ஆரம்பிச்சு நாலும் மாசம் ஆச்சு. இப்போ கூட மனசுக்குள்ள அவன் என்னோட அறிமுகமான நாட்கள பசுமையா இருக்கு. அந்த நினைவுகள் தான் மனசுல மறுபடியும் மறுபடியும் வந்து கிட்டு இருக்கு
நான்கு மாதங்களுக்கு முன்...
நான் மிதுவா. இங்க இருக்கிற நிறைய பேர் மாதிரி நானும் ஒரு computer geek. computer தான் உலகம். எப்பவும் computerயே கட்டிட்டு அழுதுகிட்டு இருந்தேன். பெரிய IT companyla வேலைக்கு சேர்ந்துடனும். தனியா சுதந்திரமா வாழனும்ன்னு கனவு. நினைச்ச மாதிரி வேலையும் கிடைச்சது. சொல்லி வச்ச மாதிரி யாரையும் நான் இருக்கிற அப்பார்ட்மெண்ட்லையும் சேர்த்துக்கல. அம்மா, அப்பா எனக்கு advice பண்ணிப் பண்ணி வாய் வலிச்சது தான் மிச்சம். எத நோக்கி ஒடினேனோ அது கிடைச்ச 2 வருஷத்துல அதுவே எனக்கு சுமையா மாறிடுச்சு. பெரிய companyல வேலை, நல்ல சம்பளம், சுதந்திரம் எல்லாம் இருந்தது. நான் set பண்ண goalஅ ரொம்ப சிக்கிரத்துல achieve பண்ணாதாலையோ என்னவோ எனக்கு இருந்த வேகம் குறைஞ்சுடுச்சு. அதே சுதந்திரம் தனிமை, வெறுமையா மாறி என்ன பயமுறுத்த ஆரம்பிச்சது. எது எனக்கு வேணும்முன்னு கூட தெளிவா தெரியலை. தனிமை நேசியானதால சொல்லிக்கிற மாதிரி friendsம் இல்ல.இந்த கம்பெனியில சேர்ந்த நாள்ல இருந்து எல்லாரோடவும் பட்டும் படாம தான் இருந்துருக்கேன். யாரோடையும் personalஅ move பண்ணது இல்ல. இப்ப புதுசா போய் friendship establish பண்ணிக்கிறதுக்கு கஷ்டமாவும், selfishஆவும் இருந்தது. அப்போ தான் அவனோட அறிமுகம் கிடைச்சது.
தொடரும்...

Subscribe to Posts [Atom]