Sunday, November 11, 2007

மனசுக்குள் மழை 2

அன்னைக்கு cafeteriaல வழக்கம் போல தனியா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தேன். cafeteriaலேயே நான் உக்காந்திருந்த tableல இருந்த எதிர் seat மட்டும் தான் காலியா இருந்தது. இவன் சுத்தி முத்திப் பாத்துட்டு என்கிட்ட எதிர் seatல யாரச்சு வர்றாங்களான்னு கேட்டுட்டு இல்லைன்னு தெரிஞ்சதும் அவன் உக்காந்து சாப்பிட ஆரம்பிச்சான். அந்த கேள்விய தவிர வேறெந்த பேச்சும் பேசல.

அதே நாள் சாயந்திரம், நான் இருக்கிற apartmentla போற வழியில அவன மறுபடியும் பாத்தேன். ஏதோ ஒரு சின்ன குழந்தை அழுதுகிட்டே இவன்கிட்ட இன்னொரு குழந்தைய பத்தி கோள் சொல்லிகிட்டு இருந்தது. இவரு சிரிச்சு கிட்டே அந்த குழந்தைக்கு சமாதானம் செஞ்சுகிட்டு இருந்தாரு என்னமோ இவர் தான் உலகத்துக்கே நீதி சொல்ல வந்த கடவுள் மாதிரி. ம்ம். நினைப்புத் தான்.

மறுநாள் மதியம் cafeteriaல நான் உக்கார இடம் தேடிகிட்டு இருந்தேன். இந்த முறை அவன் உக்காந்து இருந்த tableல இருந்த எதிர் seat மட்டும் காலியா இருந்தது. சரி, அங்க உக்கார வேணாம் வேற இடம் தேடுவோம். திரும்பி வேற இடம் தேடிகிட்டு இருந்தேன். அத பார்த்துட்டான். வேறென்ன பண்ணுவாங்க. அவனாவே கூப்பிட்டான்.

"Excuse me. இங்க யாரும் வரமாட்டாங்க. நீங்க வேணா உக்காருங்க" ன்னான்.

ஒரு sec யோசிச்சுசேன்.

"என்ன யோசிக்கிறிங்க? எங்க இவன love பண்ணிடப் போறோமுன்னு யோசிக்கிறிங்களா" ன்னான்.

எனக்கு சிரிப்புத் தான் வந்தது. ஒருவேளை இதுக்கு தான் சொல்லி இருப்பானோ?
பதிலுக்கு நானும் "ஹோ! இந்த நினைப்பு வேறயா சாருக்கு. ம் சரி அதையும் பாக்கலாமே." seatல உக்காந்தேன்.

அங்க ஆரம்பிச்சான் நூல் விட.

"என் பேர் சத்யா."

.....

"நான் புதுசா இந்த ஊருக்கு வந்துருக்கேன். இத்தனை நாள் bangaloreல இருந்தேன்".

.....

"நீங்க தோத்துட்டீங்க. தோத்துட்டீங்க".

"நானா"?

"பின்ன, எங்க நம்ம பேச ஆரம்பிச்சா love பண்ணிருவோமுன்னு பயந்து கேக்காத மாதிரி நடிக்கிறிங்க".

"ஹாலோ. உங்க பேர் சத்யா. புதுசா இந்த ஊருக்கு வந்துருக்கிங்க".

"bangaloreல இருந்து".

"ம்ம். bangaloreல இருந்து".

"so, அப்போ கேட்டுட்டு இருக்கிங்க. good. உங்க பேர் சொல்றது".

"பேர் மிதுவா. போறுமா?"

"உங்கள இன்னைக்கு விஜயநகர் பஸ் ஸ்டாப்ல பாத்தேன். அங்க தான் இருக்கீங்களோ?"

....

"என்னங்க. பேச்ச காணாம்".


"ம்ம். நானும் பாத்தேன் உங்கள அங்க. பஸ் ஸ்டாப்ல இல்ல. நேத்து ஓரு கொழந்தைக்கு சமாதானம் சொல்லிகிட்டு இருந்திங்களே அப்போ".


"ஓ! அப்போ நிஜமாவே love பண்றீங்க போல".


"ஹலோ!"


ரெண்டு பேரும் பலமா சிரிச்சோம்.

Labels:


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]