Monday, October 29, 2007

மனசு...

ரெயில் கிராஸிங்க தாண்டுறதுக்குள்ள அந்த ரெயில்வே கேட்ட நான் தொட்டுட்டா பாஸ் இல்ல அவ்வளவுதான்.
..
..
..
..
..
யப்பா தொட்டுட்டேன்.

ம்ம். இப்படித்தான், அந்த பரிச்சை எழுதினதுல இருந்து எதாவது ஒரு விஷயத்த சொல்லி அதோட முடிவையும் சொல்லி,
சொன்ன மாதிரி நடந்தா நான் பரிச்சையில பாஸா இல்ல பெயில் ஆவேனான்னு குறி பாத்துறலாமுன்னு சொல்லி செய்யவச்சுப் பாக்குது இந்த கேடுகெட்ட மனசு.

சொன்ன மாதிரி நடந்துடுச்சுன்னாலும் விடறது இல்ல நடக்கலைன்னாலும் விடறது இல்ல.

நடந்துடுச்சுன்னா மறுபடியும் எதாவத அதே மாதிரி சொல்லி 'மறுபடியும் செஞ்சு பார்க்கலாமுன்னு' சொல்லும்.

அப்படி நடக்கலைன்னா அது சேப்பில்ல சேப்பில்லன்னு சொல்லி மறுபடியும் அதே மாதிரி எதாவது சொல்லி செய்ய வைக்கும் இந்த கேடுகெட்ட மனசு.

இப்ப சொன்ன நேரத்துக்கு ரெயில் கேட்ட தொட்டுடேன். இத்தோட விட்டதா இல்ல.

காசு சுண்டிப்பார்க்கலாம். தலை விழுந்தா பாஸ் இல்ல பெயில் ஆயிடுவேங்குது.

இப்படித்தான் எந்த ஒரு உழைப்பும் இல்லாம செய்யிற எல்லா காரியத்துக்கும் அதிர்ஷ்டத்தால நினைச்ச மாதிரி நடந்துடும்முன்னு ஒரு பக்கம் ஆசைகாட்டுறது. அப்படி நடந்தா சாமிக்கு
காணிக்க தர்றதா வேண்டிக்க வைக்கிறது. அதோட நிக்காம இப்படி ரெயில்வே கேட்ட தொடறதுக்கு ஓடவைக்கிறது, காச சுண்டிப்பாக்க வைக்கிறது. இப்படி எல்லாத்தையும் பண்ண
வைக்குது இந்த மனசு. இந்த பழக்கத்த நிறுத்தனும் மொதல்ல.

பஸ் ஸ்டாப்பு வந்துருச்சு. இன்னும் அஞ்சே நிமிஷத்துல பஸ் வந்துட்டா நான் இப்படி பண்றத எல்லாம் நிறுத்திடுவேன். இல்ல அவ்வளவுதான்.

சே! தலையில அடிச்சுக்கிட்டேன்.

Comments:
மனம் ஒரு குரங்கு தான். என் கட்டுப்பாட்டுக்குள் என் மனம் இருந்ததை விட, அதன் கட்டுப்பாட்டுக்குள் நான் இருப்பதால் தான் அது பல நேரம் என் சுயமாரியாதையை இழக்க வைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் உன் 'மனசு' என் மனதை ஏதோ செய்கிறது!! :)
 
ஆஹா! வாங்க வாங்க. நீங்க சொல்றது உண்மை தான். ஜாக்கிரதையா பாத்துக்கோங்க மனச.
 
வாழ்கையின் அழகே
இது போன்ற
சின்ன சின்ன விஷயங்கள் தான்....

மனம் நம்மை மீற
நாம் அதை மீட்டுக் கொண்டு வரும் அழகு....உன் கதையில் தெரிகிறது...
கிளை விட்டு கிளை தாவும்
குரங்குகளை போலவே உன் கதைகளின்
கருக்களும்.

No pun intended. Seriously :)

நீ அதிகம் எழுத என் வாழ்த்துகள்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]